சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Wednesday, December 22, 2010

பொதுக்குழு கூட்டம்


ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். அல்குர்ஆன் (3:120)

பொதுக்குழு கூட்டம்

தேதி : 31.12.2010 வெள்ளிக்கிழமை

இடம் : துபாய் பிலேம் பார்க் (அல் - இத்திஹாத் ரோடு) DNATA அருகில்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பொதுக்குழு சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 31.12.2010 அன்று இரவு 7.00 மணியளவில் துபாய் பிலேம் பார்க் (அல் - இத்திஹாத் ரோடு) DNATA அருகில் நடைபெற உள்ளது, நமது சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு : இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வஸ்ஸலாம்.

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

தலைவர் : H.சேக்தாவூது

பொது செயலாளர் : P.M.ஜாஹிர் உசேன்

பொருளாளர் : H. அப்துல் காசிம்

Sunday, December 12, 2010

இஸ்லாமிய நல சங்கத்தின் 28 - ஆம் ஆண்டிற்கான நிர்வாக பொறுப்பாளர்கள்

28 - ஆம் ஆண்டிற்கான நிர்வாக பொறுப்பாளர்கள்

தலைவர் : H.சேக்தாவூது
துணை தலைவர் : T.ஜாஹிர் உசேன்
இணை தலைவர் : A.முஹம்மது ஜமாலுதீன்

பொது செயலாளர் : P.M.ஜாஹிர் உசேன்
துணை செயலாளர் : A. ஹாஜா நஜிபுதீன் (ANA)

பொருளாளர் : H.அப்துல் காசிம்
துணை பொருளாளர் : N.நாசர்

தகவல் தொடர்பாளர் : M.சகாபுதீன்
மக்கள் தொடர்பாளர் : S.ஜஹபர் உசேன்

செயற் குழு உறுப்பினர்கள்
S.நஜிபுதீன், M.R.S.அஹமது ராவுத்தர், M.A.K.ஹிதாயத்துல்லாஹ் M.அஹமது அன்சாரி, K.S.N.ஹசன் குத்தூஸ், R.அலாவுதீன், A.ஆசாத் காமில், N.பகுருதீன் அலி அஹமது (ANA), A.முஹம்மது ஆரீப்

ஆலோசனை குழு உறுப்பினர்கள்

S.K.M.அப்துல் காதர், M.முகம்மது ஹிலால், S.L.M.சாஹிப் மரைக்காயர், A.லியாக்கத் அலி J.மீரா முகைதீன், M.ஷாகுல் ஹமீது, P.K.M.அப்துல் ரஹ்மான், M.A.K.சிராஜூதீன் M.S.கமாலுதீன், O.M.உமர், Z.அஹமது குரைஷி

முத்துப்பேட்டை பிரதிநிதிகள்

M.நெய்னர் முஹம்மது(சோழநாடு), S.ஹுமாயூன்கபீர், M.H.சேக்தாவூது M.செய்யது அப்துல் ரஹ்மான் (பூக்கொய்யா) ,P.சின்ன மரைக்காயர்,

கவுரவ ஆலோசகர்கள்
A.ஜாபர் அலி
K.A.M.ஹாருன் ரசீது
S.ஹாஜா அலாவுதீன்

மீவா – துபை கமிட்டி

Saturday, December 11, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
மௌத்து அறிவிப்பு
முத்துப்பேட்டை P.K.T.ரோடு (MMD காசிம் வளாகம்) மர்ஹும் V.K.முகைதீன் சேக்தாவூது அவர்களின் மகனாரும், V.K.பஷீர் அஹமது அவர்களின் சகோதரரும், A.அப்துல்அஜீஸ், A.அன்வர்தீன், M.ராஜ் கபூர், A.இபுறாகீம் இவர்களின் மாமனாரும், A.ஷர்புதீன், A.ஜியாவுதீன், A. அப்துல் கபூர், M.அசாருதீன், M.தாவூது இவர்களின் மாமாவும் V.K.S.சேக் அப்துல்லா அவர்களின் தகப்பனாருமாகிய, V.K.M.ஷாகுல் ஹமீது அவர்கள் 09.12.10 வியாழக்கிழமை பகல் 12.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா 09.10.10 அன்று மாலை 6.00 மணியளவில் முகைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

அறிவிப்பவர் : M.ராஜ் கபூர் : 00971 – 55 - 4752548

தொடர்புக்கு :-

V.K.S.சேக் அப்துல்லா (முத்துப்பேட்டை) : 0091 - 9542146253
V.K.பஷீர் அஹமது (முத்துப்பேட்டை) : 0091 - 7502271766
A.ஷர்புதீன் (குவைத்) : 0096 - 599565965
A.அன்வர்தீன் (குவைத்) : 0096 - 565973841
A.இபுறாகீம் (கத்தார்) : 0097 – 433515702,433504671

இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி

MIWA வின் கூட்டு குர்பானி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பாக முதல் முறையாக கூட்டு குர்பானி (17.11.2010) ஹஜ் பெருநாள் அன்று தொழுகைக்கு பின்னர் நமது சங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டு குர்பானி (35 பங்குகள்) 5மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது இதில் நமது சங்கத்தின் முத்துப்பேட்டை பிரதிநிதிகள் மற்றும் முகைதின் பள்ளி முஹல்லா தலைவர் ஜனாப்.முகம்மது ராவுத்தர் அனைவரின் தலைமையில் குர்பானி கொடுக்கப்பட்டது. குர்பானியின் இறைச்சியை ஊர் ஏழை எளிய மக்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வல்லா ரஹ்மான் இந்த கூட்டு குர்பானி கொடுத்த அனைத்து சகோதரர்களுக்கு அதற்கு உரிய நன்மைகளை கொடுப்பானக ஆமீன் ஆமீன்

மேலும் கூட்டு குர்பானியின் புகைப்படம் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Wednesday, November 17, 2010

இஸ்லாமிய நல சங்கத்தின் 28 - ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாககுழு அறிமுக கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 28 - ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாககுழு அறிமுக கூட்டம் இன்ஷா அல்லாஹ் 16.11.2010 அன்று இரவு 7.00 மணியளவில் ஷார்ஜா அல் இத்திகாத் பார்க் (சவுதி பள்ளி அருகில்) நடைபெற உள்ளது நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்.

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

Sunday, November 7, 2010

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின்-மாடு கூட்டு குர்பானி




6:162. நீர் கூறும்: 'மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும், எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முதல் முறையாக கூட்டு குர்பானி திட்டம் செயல்பட உள்ளது இதனை பயன்படுத்தி நமதூர் வாசிகள் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் அதன் விபரம்

1 மாடு கூட்டு குர்பானி - 7 பங்குகள், ஒரு பங்கின் விலை துபாய் திராகம் 80.00 மட்டும்,குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்.

1. அஹமது ராவுத்தர் - 055 2237541
2. ஹிதாயத்துல்லாஹ் - 055 2146676
3. ஹாஜா நஜிபுதீன் - 050 5794302

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள்

உள்ஹிய்யாவின் சட்டங்கள்:
அல்லாஹ்வைத் தொழுது வணங்குங்கள்! மேலும் அவனுக்கே அறுத்துப் பலியிடுங்கள்! (106:2) மேலும் பலியிடப்படும் ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களாக நாம் ஆக்கியுள்ளோம் (22:36)ஆகிய வசனங்களின் மூலம் அல்லாஹ் குர்பானியை மார்க்கமாக்கியுள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கொழுத்த, கொம்புள்ள இரு ஆடுகளை‘பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர்’ எனக் கூறித் தாமே அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரி – முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த நபிவழியை வசதியள்ளவர்கள் நிறைவேற்றுவது அவசியம்.

உள்ஹிய்யா பிராணிகள்:
ஆடு,மாடு,ஒட்டகம் ஆகிய பிராணிகள் மட்டுமே உள்ஹிய்யாவிற்குத் தகுதியானவை. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வொரு சமூகத்தாருக்கும் பலியிடும் முறையை நாம் ஏற்படுத்தியுள்ளோம் –அவர்கள் அல்லாஹ் தங்களுக்கு வழங்கியுள்ள ஆடு – மாடு – ஒட்டகம் ஆகிய பிராணிகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி(ப் பலியி)ட வேண்டும் என்பதற்காக…(22:34)

மேலும் உள்ஹிய்யா பிராணிகள் குறைகள் இல்லாதவைகளாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். எனெனில் ‘நான்கு விதமான குறையுள்ள பிராணிகள் உள்ஹிய்யாவுக்குத் தகுதியற்றவை: அதிகக் குருடானது, அதிக வியாதியுள்ளது, அதிகம் நொண்டியானது, அதிகம் மெலிந்தது ஆகியவை’ என நபி (ஸல்) கூறியுள்ளார்கள் (திர்மிதி)

குர்பானியின் நேரம்:
பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட்டதன் பிறகிலிருந்து குர்பானிக்கான நேரம் ஆரம்பமாகின்றது. யார் பெருநாள் தொழுகைக்கு முன்பாக அறுக்கின்றாரோ அவர் தமக்காகவே அறுத்தவறாகின்றார். யார் தொழுகை(யும் குத்பா-உரையும்) முடிந்த பின் அறுக்கின்றாரோ அவர் சுன்னத்தைப் பரிபூரணப் படுத்தியவரும் முறையாக நிறைவேற்றியவருமாவார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

முறையாக அறுக்கத் தெரிந்தவர் தாமே தமது கையால் அறுப்பதும்,அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் எனக் கூறுவதுடன் அந்தக் குர்பானி யார் சார்பாக நிறைவேற்றப்படுகின்றது என்பதைக் குறிப்பிடுவதும் நபிவழியாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டைக் குர்பானியாக பலியிட்ட போது ‘பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர்’ எனக் கூறியதுடன் ‘அல்லாஹ்வே இது என் சார்பாகவும் எனது சமுதாயத்தில் யார் குர்பானி கொடுக்க(இயல)வில்லையோ அவர்கள் சார்பாகவுமாகும்’ எனவும் குறிப்பிட்டார்கள்.
(அபூதாவூத், திர்மிதி) முறையாக அறுக்கத் தெரியாதவர்கள் பிறர் மூலம் அறுக்கும் போது அவ்விடத்திற்குச் சமூகமளிக்கவாவது வேண்டும்.

உள்ஹிய்யா மாமிச வினியோகம்:
உள்ஹிய்யா கொடுப்பவர் அதன் இறைச்சியைத் தாம் உண்பதுடன் உறவினர்கள், அண்டைவீட்டார், ஏழைகள் ஆகியோருக்கு வழங்குவதும் நபிவழியாகும். ஏனென்றால் ‘அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுடையோருக்கும் உண்ணக் கொடுங்கள் (22:28)என்றும் அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்! இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவோருக்கும் தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்! (22:36) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.குர்பாணிப் பிராணிகளின் எந்தப் பகுதியையும் அதன் தோலை உறிக்கும் பணியாளுக்குக் கூலியாகக் கொடுக்கலாகாது.

குர்பானி கொடுக்க நாடுபவர் செய்யக்கூடாதவை:
உள்ஹிய்யா கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் துவங்கியதிலிருந்து உள்ஹிய்யா கொடுக்கின்ற வரை தமது மேனியிலுள்ள முடிகளையோ நகங்களையோ களையக் கூடாது.
ஏனெனில் ‘துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்கள் வந்துவிட்டால் உள்ஹிய்யா கொடுக்க விரும்புபவர் தமது நகங்களையும் முடிகளையும் (களையாமல்) தடுத்துக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) கூறியதாக உம்மு ஸலமா (ரலி) அறிவிக்கும் செய்தி அஹ்மத், முஸ்லிமில் உள்ளது. வேறொரு அறிவிப்பில் உள்ஹிய்யாவை நிறைவேற்றும் வரை தமது முடிகளையோ நகங்களையோ தீண்ட வேண்டாம் என்றுள்ளது.

உள்ஹிய்யா கொடுப்பதாக அந்த பத்து தினங்களுக்கிடையே முடிவெடுத்தாலும் முடிவெடுத்ததிலிருந்து அதை நிறைவேற்றும் வரை முடிகளையும் நகங்களையும் களையாமலிருக்க வேண்டும். அவ்வாறு முடிவெடிக்கும் முன்பு அவற்றைக் களைந்திருந்தால் குற்றமில்லை. மேலும் இந்தக் கட்டுப்பாடு உள்ஹிய்யா கொடுக்க நாடியுள்ள குடும்பத் தலைவருக்கு மட்டும் தான். அவருடைய குடும்பத்தினர் அக்குறிப்பிட்ட தினங்களில் தங்களின் மேனியிலுள்ள முடிகளையோ நகங்களையோ களைவது தவறில்லை. உள்ஹிய்யா கொடுக்க நாடியவர் காயங்கள்,மற்ற இயற்கைத் தொல்லைகள் காரணமாக முடிகளையோ நகங்களையோ களைந்தால் தவறில்லை. அதற்காக பரிகாரம் தேட வேண்டியதும் இல்லை.
முடிவாக… முஸ்லிம் சகோதரரே! சொந்தபந்தங்களுக்கு உபகாரம் செய்தல்,நெருங்கிய உறவினர்களைச் சந்தித்தல் போன்ற நல்ல காரியங்களில் ஆர்வம் காட்ட மறந்து விட கூடாது. பொறாமை, துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை இதயத்திலிருந்து அகற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

குறிப்பாக ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களுக்கு உபகாரம் செய்து இந்த நாட்களில் –பெருநாள் தினங்களில் அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும்.

அமீரகத்தின் ஷார்ஜாவில் -மருந்து கொண்டு வந்தா மாட்டுவீங்க



மருந்து கொண்டு வந்தா மாட்டுவீங்க

தடை செய்ய்ப்பட்ட மருந்துகள்

அமீரகத்தின் ஷார்ஜாவில் சமீபத்தில் நமது தாயகத்தை சேர்ந்த ஒருவர் மருந்து கொண்டு வந்து போது ஷார்ஜா விமான நிலைய காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார். அவர் சில மருந்துகளை தன்னுடைய நண்பருக்காக குறைந்த அளவிலேயே கொண்டு வந்ததபோதிலும் அந்த மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ற காரணத்திற்காக கஸ்டம்ஸ் அதிகாரி பயணியை போதை பொருள் (தடை செய்யப்பட்ட மருந்துகள்) கொண்டு வந்ததற்காக காவல்துறையிடம் ஒப்படைக்க விஷயம் விபரீதமாகிப் போனது. அவர் கொண்ட வந்த மருந்துக்கான மருந்து சீட்டின் நகல் (Doctor’s prescription) இருந்தபோதிலும் ஒரு நாள், ஒரு பகல் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டார்.
தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வந்தவருடைய தகவல் தெரியாமல் அவருடைய உறவினர்களும், நண்பர்களும் அவரின் குடும்பத்தினரும் குழப்பத்திலிருக்க, பிறகு விசாரனைக்காக அழைத்து செல்லப்படிருக்கிறார் என்ற செய்தி தெரிந்தவுடன், அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பிறகு பலகட்ட விசாரனைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இருந்தபோதிலும் பயணியின் கடவுச்சீட்டை (Passport) காவல்துறையினர் தரவில்லை. மருந்துச்சீட்டை இந்தியன் கவுன்சலேட் அட்டெஸ்ட் செய்தவுடன் தான் தர முடியும் என்று சொல்லிவிட, கவுன்சலேட் அதிகாரிகள் அந்த மருந்து சீட்டு இந்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் கொடுக்கப்ட்ட பின்னரே அட்டெஸ்ட் செய்து தர முடியும் என்று தெரிவித்தனர். இதனால் பலவாறு அலைகழிக்கப்பட்டு பிறகு ஒருவழியாக விடுவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மருந்து சீட்டை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் வாங்கின பிறகு வெளிநாட்டிற்கு மருந்து கொண்டு வந்தால் பிரச்சனை இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இது மாநகரத்தில் (சென்னையில்) இருப்ப்வருக்கே பெரிய வேலையாக இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் இருந்து வெளிநாட்டிற்கு குறிப்பாக அமீரகத்திற்கு வரும் அன்பர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு மருந்துகளை எடுத்து வாருங்கள்.

அபராதம், சிறை தண்டனை போன்ற பெரிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் அமீரகத்தில் தடை செய்ய்ப்பட்ட மருந்துகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத மருந்துகள் (காய்ச்சல், வயிற்று போக்கு மருந்துகள், குறிப்பாக இருமல்-ஜலதோஷம் தொடர்பான மருந்துகள், pain killer மருந்துகள் வாங்கி வருவதை தவிர்த்திடுங்கள்) ACTIFED compound linctus, ACTIFED DM, ADOL cold, ADOL COLD HOT THERAPY போன்ற மருந்துகள் அமீரகத்தில் தடை செயப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியளிக்ககூடியதாக இருக்கிறது.

இந்தியாவில் அதிக மருந்துகள் அரசாங்கத்தால் தடை செய்ய்ப்பட்ட போதிலும் சரியாக கவனிக்காததால் அந்த மருந்துக்கள் இன்றும் விற்பனையில் உள்ளன. என்னென்னெ மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அமீரகத்தின் அமெரிக்கா எம்பஸி (American embassy of UAE) வெளியிட்டுள்ளது.

இத்தகவலை உங்கள் தெரிந்த நபர்களுக்கும், நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்து உதவி புரியுங்கள்.

ஆக்கத்தில் உதவி : கலீஜ் டைம்ஸ் நாளிதழ்

இதைப் பற்றி 20 ஜூலை 2009 அன்று வெளிவந்த கல்ஃப் நியூஸ் நாளிதழில் வந்ததை படிக்க


Saturday, November 6, 2010

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

முத்துப்பேட்டை பட்டுக்கோடடை ரோடு, S.அப்துல் பாரி அவர்களின் தகப்பனாரும், K.M.S.காதர் பாட்சா அவர்களின் மைத்துனாருமாகிய A.S.N. சேக்முகம்மது என்கிற (நவாப்) அவர்கள் 06.11.2010 அன்று காலை மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா 06.11.2010 அன்று இரவு 8.00 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

இங்ஙனம்

மீவா – துபை கமிட்டி

அறிவிப்பவர் :- S.அப்துல் பாரி - துபை

தொடர்புக்கு :- S.அப்துல் பாரி - 050 - 7641112, 055 - 8761771

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்

பொது செயலாளர் : S. நஜிமுதீன்

பொருளாளர் : H. அப்துல் காசிம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

Tuesday, October 5, 2010

28 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாககுழு சிறப்பு கூட்டம்

6:162. நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.



28 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாககுழு சிறப்பு கூட்டம்

தேதி : 22.10.2010 வெள்ளிக்கிழமை

இடம் : துபாய் பிலேம் பார்க் (அல் - இத்திஹாத் ரோடு) DNATA அருகில்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 28 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாககுழு சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 22.10.2010 அன்று மாலை 6.30 மணியளவில் துபாய் பிலேம் பார்க் (அல் - இத்திஹாத் ரோடு) DNATA அருகில் நடைபெற உள்ளது நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு புதிய நிர்வாககுழுவை தேர்ந்தேடுத்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்.

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்

பொது செயலாளர் : S. நஜிமுதீன்

பொருளாளர் : H. அப்துல் காசிம்

Sunday, September 12, 2010

செயற்குழு சிறப்பு கூட்டம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் செயற்குழு சிறப்பு கூட்டம் ஷார்ஜாவில் நமது சங்கத்தின் உதவி தலைவர் S.ஜஹபர் உசேன் அவர்களின் ரூமில் நடைபெற்றது. அப்போது ஊரில் இருந்து உதவி கோரி வந்த விண்ணப்பங்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது அதன் விபரம்,

1.திருமண உதவி தொகை,
2.முதியோர் மற்றும் ஆதரவு அற்றோர் உதவி,
3.சிறு தொழில் தொடங்க உதவி தொகை,

பின்னர் கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதத்தில் விண்ணப்பங்களுக்கு உதவிகளை அனுப்புவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ரமலான் மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சங்க உறுப்பினர்களின் கார்டு புதுப்பிக்க இருப்பதால் காலம் தாழ்த்தாமல் சங்க உறுப்பினர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -(2),கொடுத்து உறுப்பினர் கார்டுகளை பெற்று கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் புதிய உறுப்பினர்களும் தங்களின் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்,

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் - துபாய் கமிட்டி.

உறுப்பினர் கார்டு தொடர்புக்கு :-

M.சஹாபுதீன் : 050 - 5454166

M.R.S.அஹமது ராவுத்தர் 055 - 2237541

P.M.ஜாஹீர் ஹுசேன் 050 - 5956737

S.ஜஹபர் உசேன் 050 - 4614636


Saturday, September 11, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

முத்துப்பேட்டை PKTரோடு மர்ஹும் ஷேக்காதி ராவுத்தர் அவர்களின் மகனும், P.K.M.அன்சாரி, P.K.M.முஹம்மது இத்ரீஸ், P.K.M.முஹம்மது மாலிக், P.K.M.முஹம்மதுரபிக் இவர்களின் தகப்பனாரும், P.K.M.சாதிக், P.K.M.அப்துல்ரஹ்மான், P.K.M.கனி, P.K.M.அப்துல் சலாம் இவர்களின் சிறிய தகப்பனாரும், S.அப்துல் கறிம், M.ஷேக் முஹைதீன் இவர்களின் மாமனாரும்,P.K.M.முஹம்மது பாரூக் அவர்களின் பெரிய தகப்பனாரும், மதுக்கூர் M.A.முஹம்மது புஹாரி அவர்களின் மாமாவும்மாகிய, P.K.M.காட்டுவா ராவுத்தர் அவர்கள் இன்று(11.09.2010)மாலை 6.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அன்னாரின் ஜனாஸா நாளை(12.09.2010)அசருக்கு பிறகு முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி

அறிவிப்பவர் :- S.அப்துல் கறிம் ,P.K.M.கனி
தொடர்புக்கு :

P.K.M.கனி 00971 - 50 - 5594638
M.A.முஹம்மது புஹாரி 00971 - 50 - 7677849
P.K.M.அன்சாரி 0091 - 9698362468
P.K.M.முஹம்மது மாலிக் 0091 - 9578154195

குறிப்பு : இன்ஷா அல்லாஹ் (17.09.2010) வெள்ளிக்கிழமை ஜுமா தொழுகைக்கு பிறகு துபாய் டேரா குவைத் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடைபெறும்.

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்
பொது செயலாளர் : S.நஜிமுதீன்
பொருளாளர் : H.அப்துல் காசிம்
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம், துபை கமிட்டி

Wednesday, September 1, 2010

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

முத்துப்பேட்டை PKT ரோடு, மர்ஹும் முத்து அஹமது அவர்களின் மகனும், M. முத்து அஹமது, M.முஹம்மது யூசூப் இவர்களின் தகப்பனாருமாகிய, M.முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று(01.09.2010) பகல் 2.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.00 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி

அறிவிப்பவர் :-M. முஹம்மது யூசூப் முத்துப்பேட்டை
தொடர்புக்கு :-M.முஹம்மது யூசூப் 0091 - 9865836085

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்
பொது செயலாளர் : S.நஜிமுதீன்
பொருளாளர் : H.அப்துல் காசிம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம், துபை கமிட்டி

Friday, August 20, 2010

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
முத்துப்பேட்டை சீத்தவாடி சந்து, மர்ஹீம் M.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹீம் N.M.அமீன், S.K.காதர் மஸ்தான் (மெட்ரோ), N.முஹம்மது இப்ராஹிம் , M.பஷீர் அஹமது (திருச்சி),இவர்களின் மாமியாரும், N.M.A.ராஜா என்கிற அப்துல்லாஹ், N.M.A.செல்லப்பா என்கிற இப்ராஹீம் , S.K.ஷேக் தாவூது (சஜாத் செல் சென்டர்)இவர்களின் பாட்டியவும்மாகிய, ஹபீப்கனி அம்மாள் அவர்கள் இன்று (20.08.10) அதிகாலை 3.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது, அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.


இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி

அறிவிப்பவர் :- M. நவாஸ்கான் மரைக்காயர் 00971 - 50 - 6772504

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்
பொது செயலாளர் : S.நஜிமுதீன்
பொருளாளர் : H.அப்துல் காசிம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம், துபை கமிட்டி


முத்துப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமிய நல சங்கத்தின் முன்றாம் ஆண்டு குர்ஆன் மனனப் போட்டி




















RAMADAN KAREEM


Sunday, August 8, 2010

சிறப்பு மிக்க ரமலான் மாத பித்ரா அரிசி வினியோகம்


A.N.A.Haja/10/012 Date : 08.08.2010

இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும் ஜகாத் கொடுத்தும் வாருங்கள் ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (2:110)

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 05.08.2010 அன்று சார்ஜாவில் துணை தலைவர் சகோதரர் ஜஹபர் உசேன் & நண்பர்கள் அறையில் கூட்டம் நடந்தது அவ்வமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு மிக்க ரமலான் மாத பித்ரா அரிசி வினியோகம் சென்ற வருடத்தை போன்று இவ்வருடமும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும் பித்ரா வசூலை N.பகுருதீன் அலி அஹமது(ANA) அவர்கள் தலைமையின் கீழ் பித்ரா வசூல் கமிட்டி நியமிக்கப்பட்டது.

துபாய் : 1) M. சகாபுதீன், 2) T. சாகுல் ஹமீது, 3) T. ஜாஹிர் உசேன், A. ஹாலிது, 4) M.அஹமது அன்சாரி, 5) M.R.S. அஹமது ராவுத்தர்

சார்ஜா : 1) S. நஜிபுதீன், 2) S. ஜகபர் உசேன், 3) K.S.N.ஹசன் குத்தூஸ் 4) A. முகம்மது ஜமாலுதீன், 5) N. நாசர்

அஜ்மான் : 1) M.A.K. சிராஜீதீன்,

ஆகியோர்களை பித்ரா வசூல் செய்து தரும்படி கூட்டத்தில் ஒருமனதாக கேட்டுக்கொள்ளப்பட்டது.


அனைவரும் தங்களின் பித்ரா தொகையினை வழங்கி நல்லாதரவு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

வஸ்ஸலாம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்

பொது செயலாளர் : S. நஜிமுதீன்

பொருளாளர் :H. அப்துல் காசிம்



Monday, July 5, 2010

மாதாந்திர சிறப்பு கூட்டம்

A.N.A.Haja/10/011 Date : 05.07.2010
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். அல்குhஆன் (3:120) .

மாதாந்திர சிறப்பு கூட்டம்

தேதி : 09.07.2010 வெள்ளிக்கிழமை

இடம் : சார்ஜா, பானமா ஹோட்டல் முதல் மாடி ரூம் நம்பர் 105,

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 09.07.2010 அன்று இரவு 7.30 மணியளவில் சார்ஜா, பானமா ஹோட்டல் முதல் மாடிரூம் நம்பர் 105-ல் நடைபெற உள்ளது நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்
பொது செயலாளர் : S. நஜிமுதீன்
பொருளாளர் :H. அப்துல் காசிம்

Saturday, June 26, 2010

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்…)

நடுத்தெரு மர்ஹூம் அமீர் முஹைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.க.அப்துல்ஹமீத் அவர்களின் மாமியாரும், M.ஹாஜா அலாவுதீன் அவர்களின் சிறிய தாயாரும், M.முகைதீன் அப்துல் காதர், M.சேகனா, A.காதர் முகைதீன், A.அமீர் முகைதீன், M.அஜீஸ் ரஹ்மான், தாவூது ஹமீது, யஹ்யா கான், அவர்களின் பாட்டியாருமாகிய அக்கனா (என்கிற) அஸ்மா அம்மாள் அவர்கள் (21/06/2010) காலை 7.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் மரணித்து (மௌத்தாகி) விட்டார்கள். இன்னலில்லாஹி வ இன்னா இலைகிர் ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா (21/06/2010) மாலை 5.00 மணிக்கு முகைதீன் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது, அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

அறிவிப்பவர் - M.அஜீஸ் ரஹ்மான், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்.

தொடர்புக்கு : - 0505717076

இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி

தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்
பொது செயலாளர் : S.நஜிமுதீன்
பொருளாளர் : H.அப்துல் காசிம்

Thanks : M.ABDUL MALIK ( SIA )

Monday, June 14, 2010

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

முத்துப்பேட்டை, குத்துபா பள்ளி தெரு மர்ஹீம் N.S.அப்துல் ஜபார் அவர்களின் மகனும் N.S.A.சகாபுதின், N.S.A.சேக் அப்துல் காதர், N.S.A. ஹாஜா துல்கர்னை, N.S.A.சுல்தான் ஆரிப், N.S.A.அப்துல் சாலம் அவர்களின் சகோதரரும் N.S.A.நாகூர் பிச்சை, அவர்கள் (12.06.2010) மாலை 3.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அன்னாரின் ஜனாஸா (13.06.2010) குத்துபா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது, அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.


இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி

அறிவிப்பவர் :- N.S.A.சேக் அப்துல் காதர் : 00971 05 5391649

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்
பொது செயலாளர் : S.நஜிமுதீன்
பொருளாளர் : H.அப்துல் காசிம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம், துபை கமிட்டி


Sunday, May 30, 2010

மாதாந்திர சிறப்பு கூட்டம்

A.N.A.Haja 10/009 Date : 25.05.2010

ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். அல்குர்ஆன் (3:120)

மாதாந்திர சிறப்பு கூட்டம்

தேதி : 04.06.2010 வெள்ளிக்கிழமை

இடம் : துபாய் பிலேம் பார்க் (அல் - இத்திஹாத் ரோடு), DNATA அருகில்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 04.06.2010 அன்று மாலை 7.30 மணியளவில் துபாய் பிலேம் பார்க் (அல் - இத்திஹாத் ரோடு) DNATA அருகில் நடைபெற உள்ளது, நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

தலைவர் :P.K.M. அப்துல் ரஹ்மான்

பொது செயலாளர் : S. நஜிமுதீன்

பொருளாளர் : H. அப்துல் காசிம்

Friday, May 28, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


மரண அறிவிப்பு

முத்துப்பேட்டை பேங்க்தெரு மர்ஹும் N.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனாரும், M.புர்ஹானுதீன் அவர்களின் அண்ணனும், Z.ரியாஸ் அவர்களின் மைத்துனருமாகிய, M.சுல்தான் மரைக்காயர் அவர்கள் 27.05.2010 அன்று பகல் 2.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா (28.05.2010)மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

இங்ஙனம்

மீவா -துபை கமிட்டி


அறிவிப்பவர் :- M.S.கமாலுதீன் 050-6342257


தொடர்புக்கு :- M.புர்ஹானுதீன் 050-6545610



J.மீரா முஹைதீன் 050-6909871


Monday, May 24, 2010

முன்றாம் ஆண்டு குர்ஆன் மனனப் போட்டி

A.N.A.Haja/10/008 Date: 24.05.2010

முன்றாம் ஆண்டு குர்ஆன் மனனப் போட்டி

தேதி : 29.05.2010 சனிக்கிழமை

இடம் : கொய்யா திருமண மஹால், முத்துப்பேட்டை.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முன்றாம் ஆண்டு குர்ஆன் மனனப் போட்டி இன்ஷா அல்லாஹ் 29.05.2010 சனிக்கிழமை கொய்யா திருமண மஹாலில் நடை பெற உள்ளது. அதுசமயம் வெளியூரில் இருந்து மார்க்க அறிஞர்களும் மற்றும் ஆலிமாக்களும் பெண்களுக்கான சிறப்பு இஸலாமிய செற்பொழிவுகள் நிகழ்த்திட உள்ளனர், இஸ்லாமிய சமுதாயத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரும் தங்களையும் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இது போன்ற நற்காரியங்களுக்கு தங்களுடைய பொருளாதாரத்தை தாரளமாக கொடுத்து பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, May 15, 2010

முனைவர் Dr.அப்துல்லாஹ் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி










































அல்லாஹ்வின் திருபெயரால்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையை கொண்டு கடந்த 11.05.2010 அன்றைய தினம் இரவு 9.00 மணியளவில் துபாய் ஈட் & டிரிங் ஆடிட்டோரியத்தில் (EAT & Drink Auditorium - Dubai ) மனோதத்துவ நிபுனர் பேராசிரியர் Dr.அப்துல்லா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது.

ஜனாப் Z.அஹமது குரைஷி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க M.முகம்மது அலி அவர்களின் கிராஅத்துடன் தொடங்கப்பட்ட இந் நிகழ்ச்சிக்கு M.முகம்மது ஹிலால் (மீவா - நிர்வாக கமிட்டி) அவர்கள் தலைமை தாங்க ஜனாப் Dr.ஆ.நெ.நத்தர்ஷா (சிறப்பு விருந்தினர்) H.ஷேக்தாவூது (மீவா - நிர்வாக கமிட்டி) ஆகியோர்கள் முன்னிலை வகிக்க வரவேற்புரையை P.M.ஜாஹிர் உசேன் (மீவா - நிர்வாக கமிட்டி) அவர்கள் நிகழ்த்த சங்கத்தின் கவுரக ஆலோசகர்கள் ஜனாப் A.ஜாபர் அலி (Vice President, Dubai Islamic Bank - Dubai) ஜனாப். K.M.ஹாரூன் ரசீத் (Manager, Commercial Bank of Dubai - Dubai) ஆகியோர்கள் அனிந்துரை வழங்க ஜனாப்.அப்துல் கத்தீம் (தலைவர் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் - Dubai) அவர்கள் வாழ்த்துரை வழங்க

மனோதத்துவ நிபுனர் பேராசிரியர் Dr.அப்துல்லா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள், தொடர்ந்து அன்னாரை கவுரவித்து சங்கத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டதுடன் நன்றியுரை மற்றும் துவாவை சங்கத்தின் உதவி தலைவர் S.ஜகபர் உசேன் அவர்கள் வழங்க இரவு விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.



Sunday, May 9, 2010

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி


A.N.A.Haja/10/007 Date: 09.05.2010

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தேதி : 11.05.2010 செவ்வாய்கிழமை இரவு 8.30 மணிக்கு

இடம் : ஈட் & டிரிங் ரெஸ்டாரெண்ட் பார்ட்டி ஹாலில் (Eat & Drink Restaurant Party Hall) Garhoud Area, Dubai.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சமுதாய நற்பணியில் சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 11.05.2010 அன்று இரவு 8.30 மணியளவில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர் மனோதத்துவ நிபுணர் முனைவர் Dr.அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்ச்சியை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு : இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெடர்புக்கு: 050-3436050, 050-5956737, 050-4614636, 050-2146676,050-5794302,050-5886184

வஸ்ஸலாம்


துணை தலைவர் : S. ஜகபர் உசேன்

பொது செயலாளர் : S. நஜிமுதீன்

பொருளாளர் :H.அப்துல் காசிம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபாய் கமிட்டி


Sunday, April 25, 2010

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கதின் மாதாந்திர சிறப்பு கூட்டம்

2:256 (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.



மாதாந்திர சிறப்பு கூட்டம்


தேதி : 06.05.2010 வியாழக்கிழமை

இடம் : துபாய் பிலேம் பார்க் (அல் - இத்திஹாத் ரோடு), DNATA அருகில்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 06.05.2010 அன்று இரவு 8.00 மணியளவில் துபாய் பிலேம் பார்க் (அல் - இத்தஹாத் ரோடு), DNATA அருகில் நடைபெற உள்ளது.அது சமயம் மார்க்க கல்வியின் அவசியத்தை பற்றி முஹம்மது யாசர் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு :- இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது


வஸ்ஸலாம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபை கமிட்டி


தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்


பொது செயலாளர் : S. நஜிமுதீன்


பொருளாளர் : H.அப்துல் காசிம்

Monday, March 29, 2010

முத்துப்பேட்டை இஸ்ஸாமிய நல சங்கத்தின் குர்ஆன் ஓதும் போட்டி


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


குர்ஆன் ஓதும் போட்டி

அல்லாஹ்வின் கிருபையைக்கொண்டு வரக்கூடிய மே மாதம் 2010 - ல் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பாக சிறார்களுக்கான(சிறுவர்,சிறுமியர்களுக்கான) குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பேச்சு போட்டிகள்,பயான் வழக்கம் போல் இவ்வருடமும் நடைபெறவிருக்கிறது என்பதனை அன்புடன் தெரிவித்துகொள்கிறோம்.

இன்ஷhஅல்லாஹ் போட்டி தேதி பின்னர் அறிவிக்கப்படும்

சிறப்பு பரிசுகள் வழங்க விருப்பம் உடையவர்கள் நிர்வாக குழூவை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இங்ஙனம்

மீவா – துபை கமிட்டி

Saturday, March 13, 2010

பெரியார்தாசன் ரியாதில் இஸ்லாத்தை ஏற்றார்






பெரியார்தாசன் ரியாதில் இஸ்லாத்தை ஏற்றார்: அரப் நியுஸ் பத்திரிக்கையில் செய்தி!



செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, March 13, 2010, 14:30 செய்திகள்

பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமி மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் தனது பேட்டியில் உலகிலுள்ள மதக் கொள்கைகளில் கடவுளின் வழிகாட்டல்களை நேரடியாகப்பின்பற்றும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றார்.

பிறசமய வேதங்களையும் ஆய்வு செய்தவகையில் குர்ஆனைத் தவிர ஏனையவை கடவுளின் வார்த்தைகளல்ல. இதுமட்டுமே முஹம்மது நபிக்கு அருளப்பட்டதுபோன்றே இன்றும் உள்ளது என்றார்.

அரப் நியுஸ் பத்திரிக்கைச் செய்தி:

http://arabnews.com/saudiarabia/article29180.ece

Wednesday, March 10, 2010

MIWA மாதாந்திர சிறப்பு கூட்டம்

A.N.A./10/006/11.03.2010

ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். அல்குஆன் (3:120)

மாதாந்திர சிறப்பு கூட்டம்


தேதி : 12.03.2010 வெள்ளிக்கிழமை


இடம் : M. நிஜாம் (நண்பர்கள் ரூம்) 2வது மாடி, 206 டாட்டா தர்பார் ரெஸ்டாரன்ட் பில்டிங், ஷார்ஜா


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 12.03.2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் M. நிஜாம் (நண்பர்கள் ரூம்) 2வது மாடி, 206 டாட்டா தர்பார் ரெஸ்டாரன்ட் பில்டிங், ஷார்ஜாவில் நடைபெற உள்ளது நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபை கமிட்டி


தலைவர் : P.K.M. அப்துல் ரஹ்மான்


பொது செயலாளர் : S. நஜிமுதீன்


பொருளாளர் : H. அப்துல் காசிம்


Friday, February 12, 2010

மௌத்து அறிவிப்பு (12.02.10)

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மௌத்து அறிவிப்பு


முத்துப்பேட்டை புதுத்தெரு மர்ஹும் ஷாகுல் ஹமீது அவர்களின் மகனும்,ஜனாப்,ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மாமனாரும்,H.தமீம் அன்சாரி, H.பஷீர் அஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய,S.ஹபீப் முஹம்மது அவர்கள் நேற்று (11.02.10) இரவு 12.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நாளை (13.02.10)காலை நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி

அறிவிப்பவர் :H.தமீம் அன்சாரி

தொடர்புக்கு :

ஜனாப்,ரஹ்மத்துல்லாஹ் : 050 - 2113575


Thursday, February 11, 2010

மக்கள் தொலைக்காட்சியில் நீதீயின் மறுபக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

முத்துப்பேட்டை நண்பர்கள் அனைவருக்கும் ஒரு செய்தி...

இன்ஷஅல்லாஹ் வருகிற 13.02.2010.சனிக்கிழமை அன்று இரவு மக்கள் தொலைக்காட்சியில் இரவு இந்திய நேரம் படி 8.30 மணி, துபாய் நேரம் இரவு 7.00மணிக்கு நீதீயின் மறுபக்கம் என்ற தலைப்பில் முத்துப்பேட்டையில் நடந்தது என்ன விபரம் ஒளிபரப்ப உள்ளது இதனை அனைவரும் தவறமல் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்கணம்
மீவா துபை கமிட்டி.

Saturday, February 6, 2010

மரண அறிவிப்பு


A.N.A.Haja/10/004 07.02.2010.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


மரண அறிவிப்பு

முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை ரோடு (ஓடக்கரை) மர்ஹீம் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹீம் அக்பர்அலி & பிரதர்ஸ் அவர்களின் சகோதரியும் A.ஜெவஹர்ஷ அவர்களின் தாயாரும்மாகிய பஜரியா அம்மாள் அவர்கள் நேற்று (06.02.2010) மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று(07.02.2010) முகைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

இங்ஙனம்

மீவா – துபை கமிட்டி

அறிவிப்பவர் :- S. மஹதிர் முகம்மது : 00971 05 4277145


இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.


தலைவர் பொது செயலாளர் பொருளாளர்
P.K.M.அப்துல் ரஹ்மான் S. நஜிமுதீன் H. அப்துல் காசிம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம், துபை கமிட்டி

Monday, February 1, 2010

மரண அறிவிப்பு

A.N.A.Haja/10/003 01.02.2010

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


மரண அறிவிப்பு

முத்துப்பேட்டை மர்ஹீம் M.அபுபக்கர் அவர்களின் மனைவியும், M.முகம்மது மைதீன் & பிரதர்ஸ் அவர்களின் மச்சியும் M.முகம்மது ரபிக், M.முகம்மது இபுராஹிம், M.அப்துல் மாலிக் அகியோரின் பெரிய தாயாரும், N.M.காதர் உசேன், N.M.முகம்மது சரிபு, N.M. முகம்மது ஆரிப், N.M.அப்துல் சலாம் அகியோரின் மாமியும் A.ஜாஹிர் உசேன் அவர்களின் தாயாரும்மாகிய சல்மா அவர்கள் இன்று (01.02.2010) மதியம் 3.00 மணியளவில் சென்னையில் மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

இங்ஙனம்

மீவா – துபை கமிட்டி


அறிவிப்பவர் :- M.அப்துல் மாலிக் : 00971 55 8272620

தொடர்புக்கு :- M. அப்துல் மாலிக் : 00971 55 8272620

N.M. முகம்மது ஆரிப் : 00966 5 30636072

Wednesday, January 27, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மரண அறிவிப்பு

முத்துப்பேட்டை மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும் H.சவுக்கத்அலி அவர்களின் தம்பியும் A.இம்தியாஸ் அலி அவர்களின் தகப்பனாரும் S.நஜிபுதீன்(மீவா பொதுசெயலளார் துபாய்) அவர்களின் சின்னஅத்தவுமாகிய கட்டிமேடு H.அமீர் அலி அவர்கள் இன்று மதியம் மௌத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 7.00 மணியளவில் கட்டிமேட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது அன்னாரின் மறுமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.

அறிவிப்பவர் : S.நஜிபுதீன் : 00971 50 7972946

இங்ஙனம்

மீவா - துபாய் கமிட்டி