சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Thursday, December 17, 2009

நிதி நெருக்கடி - துபாயில் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

துபாய்: நிதி நெருக்கடியால் இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவரது இரு குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர். அப்பெண்ணின் கணவர் தூக்குக் கயிறு சரியாக மாட்டப்படாததால் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.



அந்தப் பெண்ணுக்கு 38 வயதாகிறது. அவரது கணவர் பிசினஸில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் துபாயில் தங்களது மகன் (22), மகள் (20) ஆகியோருடன் வசித்து வந்தனர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் கராமா என்ற பகுதியில் இவர்களது வசிப்பிடம் உள்ளது.



தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில், புதன்கிழமை தங்களது வீட்டில் நான்கு பேரும் தூக்கில் தொங்கினர். இதில் அந்தப் பெண்ணும், அவரது இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். ஆனால் அப்பெண்ணின் கணவர் சரியாக தூக்கு கயிறு மாட்டாததால் காயங்களுடன் உயிர் தப்பினார்.



இவர்களது வீட்டுக்கு அருகாமையில் வசிப்போர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் போலீஸாருடன் விரைந்து வந்தனர்.



உயிரிழந்த மூவரின் உடல்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். காயத்துடன் போராடிக் கொண்டிருந்த பெண்ணின் கணவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.



அவரிடம் தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.