சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Saturday, March 13, 2010

பெரியார்தாசன் ரியாதில் இஸ்லாத்தை ஏற்றார்






பெரியார்தாசன் ரியாதில் இஸ்லாத்தை ஏற்றார்: அரப் நியுஸ் பத்திரிக்கையில் செய்தி!



செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, March 13, 2010, 14:30 செய்திகள்

பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமி மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் தனது பேட்டியில் உலகிலுள்ள மதக் கொள்கைகளில் கடவுளின் வழிகாட்டல்களை நேரடியாகப்பின்பற்றும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றார்.

பிறசமய வேதங்களையும் ஆய்வு செய்தவகையில் குர்ஆனைத் தவிர ஏனையவை கடவுளின் வார்த்தைகளல்ல. இதுமட்டுமே முஹம்மது நபிக்கு அருளப்பட்டதுபோன்றே இன்றும் உள்ளது என்றார்.

அரப் நியுஸ் பத்திரிக்கைச் செய்தி:

http://arabnews.com/saudiarabia/article29180.ece

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.