சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Monday, May 24, 2010

முன்றாம் ஆண்டு குர்ஆன் மனனப் போட்டி

A.N.A.Haja/10/008 Date: 24.05.2010

முன்றாம் ஆண்டு குர்ஆன் மனனப் போட்டி

தேதி : 29.05.2010 சனிக்கிழமை

இடம் : கொய்யா திருமண மஹால், முத்துப்பேட்டை.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முன்றாம் ஆண்டு குர்ஆன் மனனப் போட்டி இன்ஷா அல்லாஹ் 29.05.2010 சனிக்கிழமை கொய்யா திருமண மஹாலில் நடை பெற உள்ளது. அதுசமயம் வெளியூரில் இருந்து மார்க்க அறிஞர்களும் மற்றும் ஆலிமாக்களும் பெண்களுக்கான சிறப்பு இஸலாமிய செற்பொழிவுகள் நிகழ்த்திட உள்ளனர், இஸ்லாமிய சமுதாயத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரும் தங்களையும் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இது போன்ற நற்காரியங்களுக்கு தங்களுடைய பொருளாதாரத்தை தாரளமாக கொடுத்து பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.