சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Sunday, November 7, 2010

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின்-மாடு கூட்டு குர்பானி




6:162. நீர் கூறும்: 'மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும், எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முதல் முறையாக கூட்டு குர்பானி திட்டம் செயல்பட உள்ளது இதனை பயன்படுத்தி நமதூர் வாசிகள் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் அதன் விபரம்

1 மாடு கூட்டு குர்பானி - 7 பங்குகள், ஒரு பங்கின் விலை துபாய் திராகம் 80.00 மட்டும்,குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்.

1. அஹமது ராவுத்தர் - 055 2237541
2. ஹிதாயத்துல்லாஹ் - 055 2146676
3. ஹாஜா நஜிபுதீன் - 050 5794302

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள்

உள்ஹிய்யாவின் சட்டங்கள்:
அல்லாஹ்வைத் தொழுது வணங்குங்கள்! மேலும் அவனுக்கே அறுத்துப் பலியிடுங்கள்! (106:2) மேலும் பலியிடப்படும் ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களாக நாம் ஆக்கியுள்ளோம் (22:36)ஆகிய வசனங்களின் மூலம் அல்லாஹ் குர்பானியை மார்க்கமாக்கியுள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கொழுத்த, கொம்புள்ள இரு ஆடுகளை‘பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர்’ எனக் கூறித் தாமே அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரி – முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த நபிவழியை வசதியள்ளவர்கள் நிறைவேற்றுவது அவசியம்.

உள்ஹிய்யா பிராணிகள்:
ஆடு,மாடு,ஒட்டகம் ஆகிய பிராணிகள் மட்டுமே உள்ஹிய்யாவிற்குத் தகுதியானவை. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வொரு சமூகத்தாருக்கும் பலியிடும் முறையை நாம் ஏற்படுத்தியுள்ளோம் –அவர்கள் அல்லாஹ் தங்களுக்கு வழங்கியுள்ள ஆடு – மாடு – ஒட்டகம் ஆகிய பிராணிகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி(ப் பலியி)ட வேண்டும் என்பதற்காக…(22:34)

மேலும் உள்ஹிய்யா பிராணிகள் குறைகள் இல்லாதவைகளாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். எனெனில் ‘நான்கு விதமான குறையுள்ள பிராணிகள் உள்ஹிய்யாவுக்குத் தகுதியற்றவை: அதிகக் குருடானது, அதிக வியாதியுள்ளது, அதிகம் நொண்டியானது, அதிகம் மெலிந்தது ஆகியவை’ என நபி (ஸல்) கூறியுள்ளார்கள் (திர்மிதி)

குர்பானியின் நேரம்:
பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட்டதன் பிறகிலிருந்து குர்பானிக்கான நேரம் ஆரம்பமாகின்றது. யார் பெருநாள் தொழுகைக்கு முன்பாக அறுக்கின்றாரோ அவர் தமக்காகவே அறுத்தவறாகின்றார். யார் தொழுகை(யும் குத்பா-உரையும்) முடிந்த பின் அறுக்கின்றாரோ அவர் சுன்னத்தைப் பரிபூரணப் படுத்தியவரும் முறையாக நிறைவேற்றியவருமாவார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

முறையாக அறுக்கத் தெரிந்தவர் தாமே தமது கையால் அறுப்பதும்,அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் எனக் கூறுவதுடன் அந்தக் குர்பானி யார் சார்பாக நிறைவேற்றப்படுகின்றது என்பதைக் குறிப்பிடுவதும் நபிவழியாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டைக் குர்பானியாக பலியிட்ட போது ‘பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர்’ எனக் கூறியதுடன் ‘அல்லாஹ்வே இது என் சார்பாகவும் எனது சமுதாயத்தில் யார் குர்பானி கொடுக்க(இயல)வில்லையோ அவர்கள் சார்பாகவுமாகும்’ எனவும் குறிப்பிட்டார்கள்.
(அபூதாவூத், திர்மிதி) முறையாக அறுக்கத் தெரியாதவர்கள் பிறர் மூலம் அறுக்கும் போது அவ்விடத்திற்குச் சமூகமளிக்கவாவது வேண்டும்.

உள்ஹிய்யா மாமிச வினியோகம்:
உள்ஹிய்யா கொடுப்பவர் அதன் இறைச்சியைத் தாம் உண்பதுடன் உறவினர்கள், அண்டைவீட்டார், ஏழைகள் ஆகியோருக்கு வழங்குவதும் நபிவழியாகும். ஏனென்றால் ‘அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுடையோருக்கும் உண்ணக் கொடுங்கள் (22:28)என்றும் அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்! இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவோருக்கும் தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்! (22:36) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.குர்பாணிப் பிராணிகளின் எந்தப் பகுதியையும் அதன் தோலை உறிக்கும் பணியாளுக்குக் கூலியாகக் கொடுக்கலாகாது.

குர்பானி கொடுக்க நாடுபவர் செய்யக்கூடாதவை:
உள்ஹிய்யா கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் துவங்கியதிலிருந்து உள்ஹிய்யா கொடுக்கின்ற வரை தமது மேனியிலுள்ள முடிகளையோ நகங்களையோ களையக் கூடாது.
ஏனெனில் ‘துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்கள் வந்துவிட்டால் உள்ஹிய்யா கொடுக்க விரும்புபவர் தமது நகங்களையும் முடிகளையும் (களையாமல்) தடுத்துக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) கூறியதாக உம்மு ஸலமா (ரலி) அறிவிக்கும் செய்தி அஹ்மத், முஸ்லிமில் உள்ளது. வேறொரு அறிவிப்பில் உள்ஹிய்யாவை நிறைவேற்றும் வரை தமது முடிகளையோ நகங்களையோ தீண்ட வேண்டாம் என்றுள்ளது.

உள்ஹிய்யா கொடுப்பதாக அந்த பத்து தினங்களுக்கிடையே முடிவெடுத்தாலும் முடிவெடுத்ததிலிருந்து அதை நிறைவேற்றும் வரை முடிகளையும் நகங்களையும் களையாமலிருக்க வேண்டும். அவ்வாறு முடிவெடிக்கும் முன்பு அவற்றைக் களைந்திருந்தால் குற்றமில்லை. மேலும் இந்தக் கட்டுப்பாடு உள்ஹிய்யா கொடுக்க நாடியுள்ள குடும்பத் தலைவருக்கு மட்டும் தான். அவருடைய குடும்பத்தினர் அக்குறிப்பிட்ட தினங்களில் தங்களின் மேனியிலுள்ள முடிகளையோ நகங்களையோ களைவது தவறில்லை. உள்ஹிய்யா கொடுக்க நாடியவர் காயங்கள்,மற்ற இயற்கைத் தொல்லைகள் காரணமாக முடிகளையோ நகங்களையோ களைந்தால் தவறில்லை. அதற்காக பரிகாரம் தேட வேண்டியதும் இல்லை.
முடிவாக… முஸ்லிம் சகோதரரே! சொந்தபந்தங்களுக்கு உபகாரம் செய்தல்,நெருங்கிய உறவினர்களைச் சந்தித்தல் போன்ற நல்ல காரியங்களில் ஆர்வம் காட்ட மறந்து விட கூடாது. பொறாமை, துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை இதயத்திலிருந்து அகற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

குறிப்பாக ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களுக்கு உபகாரம் செய்து இந்த நாட்களில் –பெருநாள் தினங்களில் அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும்.

அமீரகத்தின் ஷார்ஜாவில் -மருந்து கொண்டு வந்தா மாட்டுவீங்க



மருந்து கொண்டு வந்தா மாட்டுவீங்க

தடை செய்ய்ப்பட்ட மருந்துகள்

அமீரகத்தின் ஷார்ஜாவில் சமீபத்தில் நமது தாயகத்தை சேர்ந்த ஒருவர் மருந்து கொண்டு வந்து போது ஷார்ஜா விமான நிலைய காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார். அவர் சில மருந்துகளை தன்னுடைய நண்பருக்காக குறைந்த அளவிலேயே கொண்டு வந்ததபோதிலும் அந்த மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ற காரணத்திற்காக கஸ்டம்ஸ் அதிகாரி பயணியை போதை பொருள் (தடை செய்யப்பட்ட மருந்துகள்) கொண்டு வந்ததற்காக காவல்துறையிடம் ஒப்படைக்க விஷயம் விபரீதமாகிப் போனது. அவர் கொண்ட வந்த மருந்துக்கான மருந்து சீட்டின் நகல் (Doctor’s prescription) இருந்தபோதிலும் ஒரு நாள், ஒரு பகல் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டார்.
தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வந்தவருடைய தகவல் தெரியாமல் அவருடைய உறவினர்களும், நண்பர்களும் அவரின் குடும்பத்தினரும் குழப்பத்திலிருக்க, பிறகு விசாரனைக்காக அழைத்து செல்லப்படிருக்கிறார் என்ற செய்தி தெரிந்தவுடன், அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பிறகு பலகட்ட விசாரனைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இருந்தபோதிலும் பயணியின் கடவுச்சீட்டை (Passport) காவல்துறையினர் தரவில்லை. மருந்துச்சீட்டை இந்தியன் கவுன்சலேட் அட்டெஸ்ட் செய்தவுடன் தான் தர முடியும் என்று சொல்லிவிட, கவுன்சலேட் அதிகாரிகள் அந்த மருந்து சீட்டு இந்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் கொடுக்கப்ட்ட பின்னரே அட்டெஸ்ட் செய்து தர முடியும் என்று தெரிவித்தனர். இதனால் பலவாறு அலைகழிக்கப்பட்டு பிறகு ஒருவழியாக விடுவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மருந்து சீட்டை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் வாங்கின பிறகு வெளிநாட்டிற்கு மருந்து கொண்டு வந்தால் பிரச்சனை இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இது மாநகரத்தில் (சென்னையில்) இருப்ப்வருக்கே பெரிய வேலையாக இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் இருந்து வெளிநாட்டிற்கு குறிப்பாக அமீரகத்திற்கு வரும் அன்பர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு மருந்துகளை எடுத்து வாருங்கள்.

அபராதம், சிறை தண்டனை போன்ற பெரிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் அமீரகத்தில் தடை செய்ய்ப்பட்ட மருந்துகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத மருந்துகள் (காய்ச்சல், வயிற்று போக்கு மருந்துகள், குறிப்பாக இருமல்-ஜலதோஷம் தொடர்பான மருந்துகள், pain killer மருந்துகள் வாங்கி வருவதை தவிர்த்திடுங்கள்) ACTIFED compound linctus, ACTIFED DM, ADOL cold, ADOL COLD HOT THERAPY போன்ற மருந்துகள் அமீரகத்தில் தடை செயப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியளிக்ககூடியதாக இருக்கிறது.

இந்தியாவில் அதிக மருந்துகள் அரசாங்கத்தால் தடை செய்ய்ப்பட்ட போதிலும் சரியாக கவனிக்காததால் அந்த மருந்துக்கள் இன்றும் விற்பனையில் உள்ளன. என்னென்னெ மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அமீரகத்தின் அமெரிக்கா எம்பஸி (American embassy of UAE) வெளியிட்டுள்ளது.

இத்தகவலை உங்கள் தெரிந்த நபர்களுக்கும், நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்து உதவி புரியுங்கள்.

ஆக்கத்தில் உதவி : கலீஜ் டைம்ஸ் நாளிதழ்

இதைப் பற்றி 20 ஜூலை 2009 அன்று வெளிவந்த கல்ஃப் நியூஸ் நாளிதழில் வந்ததை படிக்க