சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Thursday, December 10, 2009

மௌத்து அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

மௌத்து அறிவிப்பு

முத்துப்பேட்டை P.K.T.ரோடு மர்ஹூம் S.K. பிச்சை கனி ராவுத்தர் அவர்களின் மனைவியும், N.அப்துல் முத்தலீப் அவர்களின் சிறிய பாட்டியாவும், மர்ஹூம் S.A.பஷீர் அஹமது, A.முகைதீன் அடிமை ஆகியோரின் மாமியாரும், P. செய்யது முகம்மது அவர்களின் தாயாருமாகிய, P.பாத்துமுத்து அவர்கள் இன்று (10.12.09) காலை 7.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா 10.12.2009 இன்று மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

இங்ஙனம்,

மீவா - துபை கமிட்டி

அறிவிப்பவர் :- N.அப்துல் முத்தலீப்

தொடர்புக்கு :-

P. செய்யது முகம்மது :- 0091 - 9688353645

N.அப்துல் முத்தலீப் :- 00971 - 50 - 6780351

Wednesday, December 9, 2009

கார் டிரைவர் வேலைக்கு 1 நபர் தேவை

A.N.A.Haja/09/027/ 10.12.2009






முக்கிய செய்தி

அன்புள்ளம் கொண்ட சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அஜ்மான் நிறுவனம் ஒன்றில் (கார் டிரைவர்) வேலைக்கு 1 நபர் தேவை, ஆங்கிலம், ஹிந்தி மொழி பேச தெரிந்திருக்க வேண்டும் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.


Contacts: M.R.S.Ahamed Rowther (055-6466057)









குழந்தைகளை கேலி செய்யப்படுதலில் இருந்து பாதுகாப்பது.

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ



குழந்தைகள் தாங்கள் வளரும்போது பலவிதமான பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். அதில் ஒன்று தான் கேலி செய்யப்படுதல். கேலி மற்றும் கிண்டல்கள் குழந்தைகளை வெகுவாக பாதிக்கக்கூடியவை.
இது குழந்தைகளின் மனதில் வன்முறை சிந்தனையை உருவாக்கலாம், அல்லது அவர்களை எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட விடாமல் முடக்கி விடலாம். எந்த ஒரு காரியம் செய்தாலும், இதற்காக நாம் கேலி செய்யப்பட்டுவிடுவோமோ என்று எண்ணி அவர்களது செயல்பாடுகள் குறைந்து அவர்களது சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து விடும்.
இது போன்ற நேரங்களில் தான் அவர்களுக்கு நம் உதவி அதிகம் தேவை. அவர்களை இது போன்ற நிலைமைகளிலிருந்து மீள்வது எப்படி, அது போன்ற நேரங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதனை நாம் அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.
நாமும் ஒரு சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்..
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
குழந்தைகள் பள்ளி மற்றும் விளையாட்டிலிருந்து வீடு திரும்பினால் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களிடம் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றி கேளுங்கள்.
அவர்களை அதிகமாக பேச விடுங்கள். உங்கள் குழந்தைகளின் நம்பிக்கையை முதலில் பெற்றுக்கொள்ளுங்கள். அப்படி அவர்கள் நம்பிக்கையை நாம் பெற்றுக்கொண்டால் அவர்கள் நம்மிடம் மனம் திறந்து பேசும் வாய்ப்பு ஏற்ப்படும்.
குழந்தைகள் உங்களிடம் ரகசியங்கள் என்று ஏதாவது கூறினால், அதை ரகசியமாகவே வைத்துக்கொள்ளுங்கள். அது எவ்வளவு அற்பமான விஷயமாக இருந்தாலும் சரி. நமக்கு அற்பமான விசயங்களை அவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதலாம்.
அதனை நாம் யாரிடமாவது தெரியப்படுத்தினால் கூட குழந்தைகளுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இது அவர்களை உங்களுடன் இன்னும் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்தும்.உங்களுடன் பெற்றோர் என்ற உறவை தாண்டி நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்படும்.

இது குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லாமலிருக்கவும் அவர்கள் செய்யும் காரியங்களை நாம் அன்றாடம் தெரிந்து கொள்வதால் அவர்கள் தவறான பக்கம் சாயாமல் நாம் அவர்களை பாதுகாக்கவும் உதவும்.

உங்கள் குழந்தைகள் கேலி கிண்டலுக்கு உள்ளானால் நம்முடைய இந்த நட்பு அவர்களுடைய பிரச்சனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கும். அவ்வாறு அவர் உங்களிடன் வந்தால்,

அவர்களிடம் என்ன நடந்தது என்பதை தெளிவாக கேளுங்கள்.

அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்து அவர்களது சூழ்நிலையை ஆராயுங்கள். உங்கள் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எவ்வாறு கிண்டல் செய்யப்பட்டார்கள் என்பதனை விளக்கச் சொல்லுங்கள்.

அந்த கிண்டலில் உண்மையுள்ளதா என்று பாருங்கள்.

உண்மை இருந்தால் அதனை சரி செய்ய முயற்சி எடுங்கள். அது சரியாகி விடும் என்று உங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கையூட்டுங்கள். பொய்யாக இருந்தால் அதை பற்றி கவலை பட வேண்டாம் என்று ஆறுதல் கூறுங்கள்.

அவர்களிடம் உன்னால் இதை சமாளிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டுங்கள்.

உங்கள் குழந்தைகளை அவர்களை சந்தோஷப்படுத்தும் குழந்தைகளுடன் பழகச் சொல்லுங்கள்.

உங்களுடை சுய பண்புகளை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குழந்தையை கிண்டல் செய்பவரின் குணாதிசயமுடையவராக நீங்கள் இருக்கின்றீர்களா என்பதை யோசித்து சரி செய்துகொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு தனக்கு தானே நம்பிக்கையூட்டும் விதமாக பேசுவதை கற்றுக்கொடுங்கள்.

அவர்கள் கிண்டல் செய்யப்படும் போது, அது போலியான குற்றச்சாட்டாக இருந்தால், "இது பொய்இ எனக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை" என்று தனக்குள்ளே கூறிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் யாருடைய கருத்து உயர்ந்தது என்று அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இது போன்று சமூகத்தின் மத்தியில் ஒருவர் தாழ்த்தப்படும்போது தன்னிடத்தில் உயர்வாக இருக்கக்கூடிய விசயங்களை நாம் நினைவுகொள்வது நல்ல பயனளிக்கும்.

குழந்தைகள் கிண்டல் செய்யப்படும் போது அழுகை மற்றும் கோபம் அந்த கேலி கிண்டல்களை அதிகப்படுத்தும். இது போன்ற சமயங்களில் குழந்தைகள் கிண்டல் செய்பவரின் வர்ர்தைகளை கேட்காமல் இருப்பது போன்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பதிலும் தராமல் தான் எதாவது ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பித்து விட வேண்டும். அது கிண்டல் செய்பவரின் உற்சாகத்தைக் குறைக்கும்.

குழந்தைகள் தங்களை கிண்டல் செய்பவர் இருக்கும் இடத்தை விட்டு நகர்வது சிறந்தது.

தங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் கேலிகளை தனக்கு சாதகமாக மாற்றி பதிலளிக்க வேண்டும். இது கிண்டல் செய்பவரை குழப்பும்இ மேலும் நம்மை விட்டு கிண்டல் செய்தவரை மற்றவர்கள் கிண்டல் செய்ய காரணமாக அமையும்.

உண்மைகளை ஒத்துக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். இது குழந்தைகளை மற்றவர் கிண்டல் செய்யும்போது அவர்களுடைய கூற்று உண்மையாக இருந்தால் அதனை ஒத்துக்கொள்ள வைக்கும். இதனால் கிண்டல்கள் நிறுத்தப்படலாம்.

"அதனால் என்ன?" என்ற கேள்வி அவர்களுக்கு இது போன்ற தருணத்தில் உதவும்.இது கிண்டல் செய்பவரின் கேலிகளை தங்கள் மனதிற்குள் செலுத்தாமல் தட்டிக்கழிக்க உதவும்.

கிண்டல் செய்பவரை புகழ்வதின் மூலம் கேலி கிண்டல்களை தவிர்க்கலாம். அது கிண்டல் செய்பவரை யோசிக்க தூண்டும். கிண்டல்களை குறைக்கும்.

இக்கட்டான சூழ்நிலைகளில் பெரியவர்களின் உதவியை குழந்தைகள் நாடுவது நல்லது.

Sunday, December 6, 2009

இறையில்லம்



இறையில்லம்










இடித்து தள்ளப்பட்டது இறையில்லம்
அதற்கு தீர்வே தெரியவில்லையே
இன்றுவரையும்

மனிதம் மீறிப்பட்டது சிலமனிதமிருகங்களால்
அதற்கு முடிவே தெரியவில்லையே
இன்றுவரையும்

வந்திடுமே நல்தீர்பென்று வருடங்கள்
பதினேழையும்கடந்தும் வந்திடவில்லையே
இன்றுவரையும்

பிறர்மதத்தை இழிவாய் நினைத்து
தன்மதத்தை உயர்த்தும் மனிதன்
மனிதனில் சிறந்தவனா?

மனிதமனங்களை கொன்றுசிதைத்து
அதில் மகிழ்வுகாணும் மனிதன்
மனிதனில் புனிதவனா?

மனிதா மனிதா கேள்கேள்
மனசாட்சியிருந்தால்
அதைகேள்

நீ செய்தது சரியா பிழையா
இது மாபெரும்
பாவமில்லையா?

மனிதனாய் பிறந்துவிட்டு
மனசாட்சியைகொன்றது
முறையா?

எப்போது கிடைத்திடும் நியாயம்
அதற்காக வேண்டுகிறோம் நாளும்...


அன்புடன் நண்பன்
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்





உங்களுக்குத் தீமை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன். அல்குர்ஆன். (3 :120)

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்… )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG.32/2009) புதிய நிர்வாக தேர்ந்தெடுப்பு கூட்டம் 13.11.2009 வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஷார்ஜா அல் - இத்திஹாத் பார்க்கில்; (சவுதி பள்ளி அருகில்) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு P.M.ஜாஹிர் உசேன் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து தலைமை தாங்கிய தலைவர் H.ஷேக் தாவூது அவர்கள் இவ்வாண்டின் செயல்பாடு குறித்து விளக்கமளித்து நமது சங்க சேவைக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு செய்த அனைவருக்கும் நன்றியை தெறிவித்து கொண்டதுடன் நிர்வாக குழுவை கலைப்பதாக கூறி புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்க வேண்டுகோள் விடப்பட்டதை தொடர்ந்து M.முகம்மது ஹிலால் அவர்களை தேர்தல் கண்காணிப்பாளராக பரிந்துரை செய்யப்பட்டது.

தேர்தல் கண்காணிப்பாளராக M.முகம்மது ஹிலால் அவர்கள் இருந்து நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரின் ஒத்த கருத்தோடு நமது சங்கத்திற்கு புதிய நிர்வாக குழு கீழ்க்கண்ட நபர்கள் நிர்வாக பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

நமது சங்கத்தின் கவுரவ ஆலோசகர் K.A.M.ஹாரூன் ரசீது அவர்கள் சங்க சேவையை பாராட்டியும் புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்களும் கூறி சிறப்புறை ஆற்றினார்கள். பின்னர் இரவு விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


27 – ஆம் ஆண்டிற்கான நிர்வாக பொறுப்பாளர்கள்


தலைவர் துணை தலைவர் இணை தலைவர்

P.K.M.அப்துல் ரஹ்மான் S.ஜஹபர் உசேன் M.S.கமாலுதீன்


பொது செயலாளர் செயலாளர் இணை செயலாளர்

S.நஜிமுதீன் N.பகுருதீன் அலி அஹமது Z.அஹமதுகுரைஷி


பொருளாளர் H.அப்துல் காசிம், துணை பொருளாளர் N.நாசர்


தகவல் தொடர்பாளர் M.அப்துல் மாலிக் (சியா)

மக்கள் தொடர்பாளர் S.அலாவுதீன்





2009 ஆம் ஆண்டின் பித்ரா வினியோகம்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பொது சேவைகளின் முக்கியத்துவம் பெற்ற ரமலான் மாதத்தில் பித்ரா அரிசி வினியோக திட்டம் வழக்கம் போல் இந்த ஆண்டும் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.


இதற்காக இவ்வாண்டு ரூ 1,83,000.00 (ஒரு லட்சத்து எம்பத்திமூன்றாயிரம்) வசூல் செய்யப்பட்டு நமது சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு முத்துப்பேட்டை மற்றும் பாலாவை, சித்தமல்லி, எடையூர் சங்கேந்தி, நெடும்பலம் ஆகிய ஊர்களுக்கும் 5 கிலோ அரிசி மற்றும் 50.00 ரூபாய் ரொக்கம் வீதம் சுமார் 945 குடும்பங்களுக்கு அனைத்து முஹல்லாவாசிகளின் முழு ஒத்துழைப்போடு மிக சிறப்பான முறையில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

சேவை நோக்கோடு பித்ரா வழங்கி எல்லா வகையிலும் நமது சங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நமது சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.அறப்பணிகளை அன்றாடப்பணியாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் நமது சங்கத்தின் நற்சேவைகள் தொடர துஆ செய்து ஒத்துழைப்பு நல்கி உதவிட வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

சங்கமெனும் கூண்டிற்குள் சங்கமித்த நாம் சன்மார்க்க வழிநடந்து சமுதாய நற்பணியில் சாதனைகள் புரிந்து சமத்துவம் படைக்க வல்லோனை வணங்கி வேண்டுகிறோம்…!


முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி