சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Saturday, May 15, 2010

முனைவர் Dr.அப்துல்லாஹ் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி










































அல்லாஹ்வின் திருபெயரால்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையை கொண்டு கடந்த 11.05.2010 அன்றைய தினம் இரவு 9.00 மணியளவில் துபாய் ஈட் & டிரிங் ஆடிட்டோரியத்தில் (EAT & Drink Auditorium - Dubai ) மனோதத்துவ நிபுனர் பேராசிரியர் Dr.அப்துல்லா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது.

ஜனாப் Z.அஹமது குரைஷி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க M.முகம்மது அலி அவர்களின் கிராஅத்துடன் தொடங்கப்பட்ட இந் நிகழ்ச்சிக்கு M.முகம்மது ஹிலால் (மீவா - நிர்வாக கமிட்டி) அவர்கள் தலைமை தாங்க ஜனாப் Dr.ஆ.நெ.நத்தர்ஷா (சிறப்பு விருந்தினர்) H.ஷேக்தாவூது (மீவா - நிர்வாக கமிட்டி) ஆகியோர்கள் முன்னிலை வகிக்க வரவேற்புரையை P.M.ஜாஹிர் உசேன் (மீவா - நிர்வாக கமிட்டி) அவர்கள் நிகழ்த்த சங்கத்தின் கவுரக ஆலோசகர்கள் ஜனாப் A.ஜாபர் அலி (Vice President, Dubai Islamic Bank - Dubai) ஜனாப். K.M.ஹாரூன் ரசீத் (Manager, Commercial Bank of Dubai - Dubai) ஆகியோர்கள் அனிந்துரை வழங்க ஜனாப்.அப்துல் கத்தீம் (தலைவர் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் - Dubai) அவர்கள் வாழ்த்துரை வழங்க

மனோதத்துவ நிபுனர் பேராசிரியர் Dr.அப்துல்லா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள், தொடர்ந்து அன்னாரை கவுரவித்து சங்கத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டதுடன் நன்றியுரை மற்றும் துவாவை சங்கத்தின் உதவி தலைவர் S.ஜகபர் உசேன் அவர்கள் வழங்க இரவு விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.