சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Saturday, February 16, 2013

மௌத்து அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முத்துப்பேட்டை சி.க.மரைக்காயர் தெரு, சீத்தவாடி சந்து மர்ஹூம் அமீர் முகைதீன் அவர்களின் மனைவியும், கால்நடை மருத்துவர் M.S.முஹம்மது அலியார் அவர்களின் சகோதரியும், சுல்தான் அவர்களின் தாயாரும், அதிராம்பட்டினம் அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமாகிய நபிஷா அம்மாள் அவர்கள் 15.02.2013 காலை 7.00 மணியளவில் மெளத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா 15.02.2013 மாலை 4.00 மணியளவில் அரபு சாஹிபு பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்

அறிவிப்பவர்
சுல்தான்

Sunday, February 10, 2013

மௌத்து அறிவிப்பு

முத்துப்பேட்டை – குண்டாம்குளத்தெரு மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனாரும், மல்லிப்பட்டினம் மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், ஜமால், சலீம்கான், முகமது ரபிக் ஆகியோர்களின் மச்சானும், துளசியாப்பட்டினம் ஹெச். ஹாஜகான் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் மு. முகம்மது காசிம், முகம்மது அலி ஆகியோர்களின் மருமகனும், ராஜா சுகர்னோ, ஃபைசல் சுகர்னோ ஆகியோர்களின் தகப்பானருமாகிய (அல் இஸ்லாம் மெட்டிக்குலேசன் ஸ்கூல், தஞ்சாவுர்) முகம்மது ஹெச். சுகர்னோ அவர்கள் இன்று அதிகாலை(11.02.2013) 4 மணியளவில் மௌத் ஆகி விட்டார்கள்.

“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்”.

அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்

அறிவிப்பவர் :

ராஜா சுகர்னோ

ஃபைசல் சுகர்னோ