இது அவர்களை உங்களுடன் இன்னும் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்தும்.உங்களுடன் பெற்றோர் என்ற உறவை தாண்டி நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்படும்.
இது குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லாமலிருக்கவும் அவர்கள் செய்யும் காரியங்களை நாம் அன்றாடம் தெரிந்து கொள்வதால் அவர்கள் தவறான பக்கம் சாயாமல் நாம் அவர்களை பாதுகாக்கவும் உதவும்.
உங்கள் குழந்தைகள் கேலி கிண்டலுக்கு உள்ளானால் நம்முடைய இந்த நட்பு அவர்களுடைய பிரச்சனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கும். அவ்வாறு அவர் உங்களிடன் வந்தால்,
அவர்களிடம் என்ன நடந்தது என்பதை தெளிவாக கேளுங்கள்.
அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்து அவர்களது சூழ்நிலையை ஆராயுங்கள். உங்கள் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எவ்வாறு கிண்டல் செய்யப்பட்டார்கள் என்பதனை விளக்கச் சொல்லுங்கள்.
அந்த கிண்டலில் உண்மையுள்ளதா என்று பாருங்கள்.
உண்மை இருந்தால் அதனை சரி செய்ய முயற்சி எடுங்கள். அது சரியாகி விடும் என்று உங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கையூட்டுங்கள். பொய்யாக இருந்தால் அதை பற்றி கவலை பட வேண்டாம் என்று ஆறுதல் கூறுங்கள்.
அவர்களிடம் உன்னால் இதை சமாளிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டுங்கள்.
உங்கள் குழந்தைகளை அவர்களை சந்தோஷப்படுத்தும் குழந்தைகளுடன் பழகச் சொல்லுங்கள்.
உங்களுடை சுய பண்புகளை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குழந்தையை கிண்டல் செய்பவரின் குணாதிசயமுடையவராக நீங்கள் இருக்கின்றீர்களா என்பதை யோசித்து சரி செய்துகொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு தனக்கு தானே நம்பிக்கையூட்டும் விதமாக பேசுவதை கற்றுக்கொடுங்கள்.
அவர்கள் கிண்டல் செய்யப்படும் போது, அது போலியான குற்றச்சாட்டாக இருந்தால், "இது பொய்இ எனக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை" என்று தனக்குள்ளே கூறிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் யாருடைய கருத்து உயர்ந்தது என்று அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இது போன்று சமூகத்தின் மத்தியில் ஒருவர் தாழ்த்தப்படும்போது தன்னிடத்தில் உயர்வாக இருக்கக்கூடிய விசயங்களை நாம் நினைவுகொள்வது நல்ல பயனளிக்கும்.
குழந்தைகள் கிண்டல் செய்யப்படும் போது அழுகை மற்றும் கோபம் அந்த கேலி கிண்டல்களை அதிகப்படுத்தும். இது போன்ற சமயங்களில் குழந்தைகள் கிண்டல் செய்பவரின் வர்ர்தைகளை கேட்காமல் இருப்பது போன்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பதிலும் தராமல் தான் எதாவது ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பித்து விட வேண்டும். அது கிண்டல் செய்பவரின் உற்சாகத்தைக் குறைக்கும்.
குழந்தைகள் தங்களை கிண்டல் செய்பவர் இருக்கும் இடத்தை விட்டு நகர்வது சிறந்தது.
தங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் கேலிகளை தனக்கு சாதகமாக மாற்றி பதிலளிக்க வேண்டும். இது கிண்டல் செய்பவரை குழப்பும்இ மேலும் நம்மை விட்டு கிண்டல் செய்தவரை மற்றவர்கள் கிண்டல் செய்ய காரணமாக அமையும்.
உண்மைகளை ஒத்துக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். இது குழந்தைகளை மற்றவர் கிண்டல் செய்யும்போது அவர்களுடைய கூற்று உண்மையாக இருந்தால் அதனை ஒத்துக்கொள்ள வைக்கும். இதனால் கிண்டல்கள் நிறுத்தப்படலாம்.
"அதனால் என்ன?" என்ற கேள்வி அவர்களுக்கு இது போன்ற தருணத்தில் உதவும்.இது கிண்டல் செய்பவரின் கேலிகளை தங்கள் மனதிற்குள் செலுத்தாமல் தட்டிக்கழிக்க உதவும்.
கிண்டல் செய்பவரை புகழ்வதின் மூலம் கேலி கிண்டல்களை தவிர்க்கலாம். அது கிண்டல் செய்பவரை யோசிக்க தூண்டும். கிண்டல்களை குறைக்கும்.
இக்கட்டான சூழ்நிலைகளில் பெரியவர்களின் உதவியை குழந்தைகள் நாடுவது நல்லது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.