ஜெருசேலம்: ஹமாஸ் இயக்கத்தினர் பிடியில் கடந்த 3 வருடங்களாக இருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டை மீட்பதற்காக 980 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்ய இஸ்ரேல் முன்வந்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தினர் 2006ம் ஆண்டு ஜூன் மாதம் கிலாடை கடத்திச் சென்றனர். அவரை மீட்க இஸ்ரேல் அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
ஆனால் கிலாட்டை விடுவிக்க வேண்டும் என்றால், இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள 980 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது. முதலில் 450 பாலஸ்தீனியர்களையும், கூடுதலாக 530 பேரையும் விடுவிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
விடுவிக்கப்படவுள்ள 980 பேர் யார் என்பதை இறுதி செய்யும் வேலையில் தற்போது இஸ்ரேல் தீவிரமாக உள்ளதாம்.
கிலாட்டை மீட்க கடந்த வாரம் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படியே 980 பேரை விடுவிக்க இஸ்ரேல் முன்வந்தது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.