சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Wednesday, December 21, 2011

சிறப்பு செயற்குழு கூட்டம்

ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். அல்குர்ஆன் (3:120)

சிறப்பு செயற்குழு கூட்டம்

தேதி : 23.12.2011 வெள்ளிக்கிழமை

இடம் : துபாய் - F. நவாஸ்கான் நண்பர்கள் ரூம் (HOR AL ANZ)


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 23.12.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் துபாய் - F. நவாஸ்கான் நண்பர்கள் ரூமில் (HOR AL ANZ) நடைபெற உள்ளது, நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.