அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG No.32/2009) புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுப்பு கூட்டம் 21.10.2011 சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் துபாய் அல் - இத்திஹாத் பார்க்கில் (DNATA -அருகில்) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு S. ஜஹபர் உசேன் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து தலைமை தாங்கிய தலைவர் H.ஷேக் தாவூது அவர்கள் நடப்பு ஆண்டு செயல்பாட்டின் ஆண்டறிக்கையை வாசித்து அளித்தார்கள், மேலும் நமது சங்க சேவைக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டதுடன் நிர்வாக குழுவை கலைப்பதாக கூறி புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்க வேண்டுகோள்விடப்பட்டதை தொடர்ந்து H.ஷேக் தாவூது அவர்களை தேர்தல் கண்காணிப்பாளராக இருந்து புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரின் ஒருமித்த கருத்தோடு நமது சங்கத்திற்கு புதிய நிர்வாக குழுவிற்கு கீழ்க்கண்ட நபர்கள் நிர்வாக பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம், என்றும் போல் தாங்கள் அனைவர்களின் ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.